ஹமாஸ் அமைப்பினரால் நிர்வகிக்கப்படும் காசாவில் இருந்து வெளியேறும் அகதிகள் விவகாரத்தை ஆஸ்திரேலியா எச்சரிக்கையுடனேயே கையாள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் யூதர்களின் நிர்வாகக் குழு இணை தலைமை அதிகாரியான இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
ஹமாஸின் 16 ஆண்டுகால ஆட்சி காலத்தில் காசாவில் வாழும் மக்கள்மீது திணிக்கப்பட்டுள்ள சிந்தாத்தங்கள் பற்றியும் நுணுக்கமாக ஆராய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ நாம் மனிதாபிமான இருக்க வேண்டும் என்பதைவிடவும் தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது.” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாகோரி பாலஸ்தீனர்களிடமிருந்து 10 ஆயிரத்து 33 விண்ணப்பங்கள் வந்துள்ளன எனவும், அவற்றில் 7 ஆயிரத்து 111 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஒக்டோபர் 7 தாக்குதல் சம்பத்துக்கு பிறகு இஸ்ரேலிய பிரஜைகளுக்கு ஆஸ்திரேலியாவால் மும்மடங்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
8 ஆயிரத்து 746 பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் 253 பேரின் விசாக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.