மெல்பேர்ணின் வடகிழக்கு பகுதியில் இளம் மருந்தாளர் ஒருவரை கொலை செய்த 54 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான Kum Chuan Leong என்பவரே இவ்வாறு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் இவர் மெல்பேர்ண் சுகாதார சேவையில் இணைந்துள்ளார்.
இக்கொலை சம்பவம் தொடர்பில் 54 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
ஜனவரி 16 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அதுவரை குறித்த நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.