காஸா பகுதிக்குள் மனிதாபிமான உதவிகள் தடையின்றிச் சென்றடைவதற்கு இஸ்ரேல் அனுமதியளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் வலியுறுத்தியுள்ளார்.
கனடா, இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையைத் தொடர்ந்து அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
காஸாவின் தற்போதைய மனிதாபிமான நெருக்கடியை முழுமையாக மாற்றியமைக்க முடியும் என அந்தக் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், கடுமையான காலநிலை மற்றும் கனமழை காரணமாக ஏற்கனவே மோசமடைந்துள்ள காஸாவின் மனிதாபிமான நிலைமை மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக பென்னி வோங் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.