ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஒக்டோபர் மாதத் தரவுகளின்படி, வேலையின்மை விகிதம் 4.7 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் சுமார் 43,500 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதுடன், வேலையற்றோரின் எண்ணிக்கை 753,700 ஆக உயர்ந்துள்ளது. பொருளாதார நிபுணர்கள் வேலையின்மை விகிதம் மாற்றமின்றி இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்த அதிகரிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதமும் 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2021ஆம் ஆண்டு ஒக்டோபருக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச நிலையாகும்.
பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புள்ளிவிபரங்கள் அவுஸ்திரேலியாவின் தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது