விக்டோரியா மாநிலத்தில் 26 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள கஞ்சாடி செடிகளைக் கைப்பற்றி, அவற்றை அழிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Leongatha வில் தெற்கு பகுதியிலுள்ள Gippsland
நகரத்திலிருந்தே இவ்வாறு 6 ஆயிரம் கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விக்டோரியாவில் அண்மையில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான சட்டவிரோதை போதைப்பொருள் இதுவாகும்.
இது தொடர்பில் நான்கு ஆண்களும், ஒரு பெண்ணுமாக மொத்தம் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வியட்நாம் பிரஜைகளென தெரியவருகின்றது. கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள், சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டன.
வியாபார நோக்கிலேயே கஞ்சா வளர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த வலையமைப்பின் பின்புலம் பற்றியும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.