தேர்தலில் Brindabella. தொகுதியில் லேபர் கட்சி அமைச்சராக இருந்த Mick Gentleman ஐ தோற்கடித்து கிறீன்ஸ் கட்சி வேட்பாளரான Lauran Nuttall வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம் தேர்தலில் கிறீன்ஸ் கட்சிக்கு நான்கு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
Australian Capital Territory சட்டசபையில் 25 ஆசனங்கள் உள்ளன. தேர்தலில் லேபர் கட்சிக்கு 10 ஆசனங்களும், லிபரல் கட்சிக்கு 9 ஆசனங்களும், கீறின்ஸ் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இரு ஆசனங்களை சுயேச்சைக்குழுக்கள் கைப்பற்றியுள்ளன.
தேர்தலில் ஆட்சியமைப்பதற்குரிய தனிப்பெரும்பான்மை லேபர் கட்சிக்கு கிடைக்கப்பெறவில்லை. எனவே, கிறீன்ஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்குரிய முயற்சி எடுக்கப்படலாம் என தெரியவருகின்றது. இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
கூட்டாட்சிக்கு கிறீன்ஸ் கட்சி ஒத்துழைப்பு வழங்குமா அல்லது எதிரணியில் இருந்து ஆதரவு வழங்குமா என்பது உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
சட்டசபையை லேபர் கட்சியே கடந்த 234 ஆண்டுகளாக நிர்வகித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.