குயின்ஸ்லாந்து மாநில நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ளது.
மூன்று வாரகால தீவிர பிரச்சாரம், முன்கூட்டிய வாக்களிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் தேர்தல் களம் சூடிபிடித்திருந்த நிலையிலேயே, நாளையுடன் தேர்தல் சமர் ஓய்கின்றது.
ஒரு மில்லியனுக்கும் அதிகளமான வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். ஏனையோர் இன்று வாக்களிப்பார்கள்.
மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் லேபர் கட்சி ஈடுபட்டுவருகின்றது. பிரீமியர் தனது பதவியை தொடர்வதற்கு தேர்தல் வெற்றியை இலக்காகக்கொண்டுள்ளார்.
அதேபோல குயின்ஸ்லாந்து லிபரல் தேசியக் கட்சியும் ஆட்சியை பிடிப்பதற்கு முனைப்புகாட்டிவருகின்றது.
நாளை காலை 8 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி, மாலை 6 மணிவரை வாக்கெடுப்பு நடைபெறும்.
குயின்ஸ்லாந்து 18 வயதுக்கு மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உரிய காரணமின்றி எவரேனும் வாக்களிக்க தவறினால் 161.30 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.