ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்துள்ள நிலையில், அதன் தலைவரும் பிரீமியருமான பென் கரோல் தனது சொந்தத் தொகுதியான நிட்ரியிலும் தோல்வியடைந்துள்ளார்.
இதன்மூலம், விக்டோரியாவின் பிரீமியர் ஒருவர் தேர்தலில் தனது சொந்த தொகுதியையும் இழந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஜெசிந்தா ஆலன் பதவி விலகியதைத் தொடர்ந்து, பென் கரோல் விக்டோரியாவின் 50ஆவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் வெறும் 123 நாட்களே முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார்.
12 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு சரிந்த நிலையில், புதிய தலைமைத்துவத்தின் கீழ் தேர்தலை எதிர்கொண்ட அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
1975ஆம் ஆண்டு மெல்பேர்னின் எயார்போர்ட் வெஸ்ட் பகுதியில் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த பென் கரோல், தனது 14ஆவது வயதில் கேமார்ட் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் சட்டத்துறையில் கல்வி கற்று, அரசியல் ஆலோசகராகப் பணியாற்றிய அவர், 2012ஆம் ஆண்டு நிட்ரி தொகுதியிலிருந்து மாநில நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
தனது அரசியல் வாழ்க்கையில் 16 அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ள அவர், 2023ஆம் ஆண்டு துணை பிரீமியராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2026 ஜூலையில் பிரீமியரானார்.