சிட்னி தென்மேற்கு பகுதியில் இரு இலகு ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர்.
இன்று நண்பகல் வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு விமானங்களும் வானில் மோதுண்டு, தரையில் விழுந்து நொறுங்கியுள்ளன. இதனையடுத்து தீ பரவலும் ஏற்பட்டது.
அவசர சேவை பிரிவினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.