மெல்பேர்ணின் தென்மேற்கே உள்ள Geelong பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
வெட்டு காயங்களுக்கு இலக்கான 20 வயது இளைஞன் ஒருவர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
வாய்த்தர்க்கமே கைகலப்பாக மாறி, இறுதியில் வாள்வெட்டுவரை சென்றுள்ளது எனக் கூறப்படுகின்றது. காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.