AUKUS பாதுகாப்பு கூட்டணியில் நியூசிலாந்தும் இணையலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.
AUKUS கூட்டணியில் தொழில்நுட்பசார் விடயங்களில் இணைவதற்கு ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நியூசிலாந்தும் இணையலாம் எனவும் குறிப்பிட்டார்.
நியூசிலாந்து பிரதமர் Chris Luxon ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளினதும் அரச தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள அவருக்கு கன்பரா நாடாளுமன்ற வளாகத்தில் அரசமுறை வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பிறகு இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன. கைதிகள் பரிமாற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் பின்னர் AUKUS கூட்டணியில் நியூசிலாந்து இணைய வேண்டுமா என்பது பற்றி பிரதமரிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளிக்கையிலேயே இணைவதற்குரிய அழைப்பை அவர் விடுத்தார்.
AUKUS பாதுகாப்பு கூட்டணியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அங்கம் வகிக்கின்றன. அதில் அணுசக்தி விடயங்களைத்தவிர தொழில்நுட்பம் சார் விடயங்களில் இணைவது பற்றி ஜப்பான் பரிசீலித்துவருகின்றது.