குயின்ஸ்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் லேபர் கட்சியில் ஒரு தசாப்தகால ஆட்சி முடிவுக்கு வரவுள்ளது.
41 ஆவது பிரிமியராக David Crisafulli பதவியேற்கவுள்ளார். ஆளுநர் முன்னிலையில் அவர் நாளை பதவியேற்ற பின்னர், பிரிதொரு நாளில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.
ஆட்சியமைப்பதற்கு 47 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், 48 ஆசனங்களை வென்று, தனிப்பெரும்பான்மையை லிபரல் தேசியக் கூட்டணி பெற்றுள்ளது.
தேர்தல் தோல்வியால் லேபர் கட்சியின் குயின்ஸ்லாந்து மாநில தலைவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.