மெல்பேர்ண் பகுதியில் நபரொருவரை கத்திக்குத்து தாக்குதல்மூலம் கொலை செய்த கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலையே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றது. அத்துடன், தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்தனர். அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டையில் பொலிஸார் இறங்கினர்.
இந்நிலையிலேயே அவர் இன்று காலை பொலிஸில் முன்னிலையானபோது கைது செய்யப்பட்டுள்ளார். 20 வயது இளைளுர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குழு மோதலின் விளைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பொலிஸ் விசாரணை தொடர்கின்றது.