கூட்டாட்சி தேர்தலில் லிபரல் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் குயின்ஸ்லாந்து மாநில நாடாளுமன்றத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் லேபர் கட்சியின் 9 ஆண்டுகால ஆட்சிக்கு அம்மாநிலத்தின் லிபரல் கட்சி, தேர்தலின் வென்று முடிவுட்டியுள்ளது.
இந்நிலையிலேயே லிபரல் கட்சியின் தேசிய தலைவரான பீட்டர் டட்டன், மாநில தேர்தல் முடிவை கூட்டாட்சி தேர்தலுடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையை பெறுவதற்கு 47 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், மாநில லிபரல் கட்சி 48 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
கூட்டாட்சி தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. அத்தேர்தலின்போது லேபர் ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதையே தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது எனவும் எதிர்;க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்வி தொடர்பில் தமது கட்சி மீளாய்வு செய்துவருகின்றது என்று லேபர் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.