மெல்பேர்ண் வடகிழக்கு பகுதியில் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்ட நிலையில், சந்தேகத்தின்பேரில் ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவிலேயே வீட்டிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 33 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.
இது சந்தேகத்துக்கிடமான மரணமாக கருதப்படுகின்றது. பொலிஸ் விசாரணை தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.