ஆஸ்திரேலியாவின் வருடாந்த பணவீக்க வீதம் 2.8 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வருட நடுப்பகுதியில் பணவீக்க வீதம் 3.8. ஆக இருந்தது.
கடந்த மூன்றரை வருட காலப்பகுதிக்குள் வருடாந்த பணவீக்க வீதம் இம்முறையே சடுதியாக குறைவடைந்துள்ளது.
இது விலை உயர்வு அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆஸ்திரேலிய புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் செப்டம்பர் காலாண்டிய விலையேற்றமானது 0.2 வீதமாக பதிவாகியுள்ளது.