மெல்பேர்ண் ஆரம்ப பள்ளியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நான்கு மாணவர்களும் குணமடைந்துவருகின்றனர்.
இவ்விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்த 11 வயது மாணவனுக்கு மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். மாநில முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களும் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.
கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாடசாலை வளாகத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்த மேசை பகுதியில் மோதியது.
10 மற்றும் 11 வயதுகளுக்கிடைப்பட்ட மாணவர்களே விபத்தில் காயமடைந்தனர். அனைவரும் உடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் 11 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். ஏனையோர் அவசர சேவை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தற்போது நிலையான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
காரை ஓட்டிச்சென்ற 40 வயது பெண் கைது செய்யப்பட்டுஇ விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.