300 இற்கு மேற்பட்ட பூர்வக்குடி பெண்கள் கொலை!
ஆஸ்திரேலியாவில் 300 இற்கு மேற்பட்ட பூர்வக்குடி பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கிறீன்ஸ் கட்சி செனட்டர் Dorinda Cox
தெரிவித்துள்ளார்.
பூர்வக்குடி பெண்கள் மற்றும் சிறார்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல்ஆக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட செனட் குழுவின் இறுதி விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது.
குறித்த அறிக்கை பூர்வக்குடி மக்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் செனட் விசாரணைக்குழுவில் இடம்பெற்றிருந்த கிறீன்ஸ் செனட்டர் Dorinda Cox , வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டார்.
அறிக்கையில் உள்ள சில நேர்மறையான விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூர்வக்குடி பெண்கள் மற்றும் சிறார்களுக்காக ஒரு சட்டத்தரணியை நியமிக்க குழு பரிந்துரைப்பது வரவேற்கத்தக்கது என்று சட்டத்தரணி Karen Iles தெரிவித்தார்.
பழங்குடியினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் உட்பட ஆதரவு சேவைகளுக்கான நிலையான நிதியளிப்பு பொறிமுறைக்கான அழைப்பையும் அவர் வரவேற்றுள்ளார்.
எனினும், செனட் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள 10 பரிந்துரைகள்மூலம் நீதி கிட்டுமா அல்லது மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே என்று மேலும் சில செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.