தனது துணையை கத்தியால் குத்தி கொலை செய்த மெல்பேர்ண் நபருக்கு 28 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டிலேயே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயது பெண்ணொருவரே சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 38 வயது நபரே குற்றவாளியென கண்டறியப்பட்டு, அவருக்கு இன்று நீதிமன்றதால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 22 ஆண்டுகள்வரை அவர் பிணைக்கு விண்ணப்பிக்க முடியாது.