பேர்த்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 35 வயதான பூர்வக்குடி நபரொருவர் உயிரிழந்துள்ளார். பிணை நிபந்தனைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மிட்லாண்ட் பொலிஸாரால் குறித்த நர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார் என்று மேற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அவர் பேர்த்திலுள்ள கண்காணிப்பு நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
அவரது நடத்தையில் மாற்றம் தென்பட, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் உயிரிழந்துவிட்டார்.
மரண பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
1991 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் பொலிஸ் காவலில் இருந்தபோது 600 இற்கு மேற்பட்ட பூர்வக்குடி பிரஜைகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.