சிட்னியில் அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தண்ணீர் கட்டணம் 50 சதவீதத்தால் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சனத்தொகை வளர்ச்சியும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது. மேற்படி காலப்பகுதியில் சிட்னியில் 3 லட்சம் குடும்பங்கள்வரை அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நகர வாசிகளுக்கு, தண்ணீர் கட்டண உயர்வும் நெருக்கடியாக அமையவுள்ளது.