மெல்பேர்ண் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை நபரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர். எனினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நபர் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை விக்டோரியா பொலிஸார் தேடிவருகின்றனர்.
இச்சம்பவத்தின் பின்னர் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.