2023 ஒக்டோபர் 7 முதல் இதுவரையில் 3,041 பாலஸ்தீனர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன், இக்காலப்பகுதிக்குள் 7,252 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனர் ஒருவர் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குணநல விவகாரத்தின் அடிப்படையில் அவரின் விசா இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை பாதுகாப்பு காரணங்களுக்காக பாலஸ்தீனர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
காஸாவில் கடந்த 48 மணித்தியாலங்களில் 50 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இவ்வாறு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு யுனிசெப்கண்டனம் வௌியிட்டுள்ளது.
கடந்த வருடம் காஸா மோதல் ஆரம்பமாகியதிலிருந்து இதுவரை 43,314 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 102,019 பேர் காயமடைந்துள்ளனர்.