அடலெயிற்றின் தெற்கே உள்ள Fleurieu தீபகற்ப பகுதியில் இன்று மதியம், மூன்று கார்கள் மீது டிரக் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், எட்டு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் இருவர் விமானம் மூலம் பிளிண்டர்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ஏனையோரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேஜர் க்ராஷ் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
சபா.தயாபரன்