விக்டோரியாவில் உள்ள Greater Bendigo பகுதியில் புவியியல் ஆஸ்திரேலியாவின் கூற்றுப்படி 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை காலை 6.41 மணியளவில் Barnadown அருகிலுள்ள Wellsford மாநில வனப்பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்த போதிலும், பின்னர் 3.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கத்தை சிலர் உணர்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 8, 2024 அன்று விக்டோரியாவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவான சில மாதங்களுக்குப் பிறகு இது ஏற்பட்டிருக்கிறது.
சபா.தயாபரன்