குயின்ஸ்லாந்து மாநில எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் பிரீமியர், Steven Miles ஐ லேபர் கட்சி நியமித்துள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 9 ஆண்டுகளாக லேபர் கட்சி ஆட்சி தொடர்ந்த நிலையில், கடந்தவாரம் நடந்த தேர்தலில் லிபரல் கட்சி வெற்றிபெற்றது.
இதனால் மாநில தலைவர் பதவியை Steven Miles
இழப்பாரென பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் லேபர் கட்சியின் விசேட கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன்போது மாநில தலைமைப்பதவிக்கு போட்டி நிலவவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு Steven Miles போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லேபர் கட்சி மாநில தலைவர் பதவியிலும் தொடர்வார்.