இந்தியாவுடனான வர்த்தக ரீதியிலான உறவு மேம்படுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் இதற்குரிய காத்திரமான பொறிமுறை வகுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் இன்று கன்பராவில் ஆரம்பமானது.
இதில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா வந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி, விவசாயம், கல்வி மற்றும் சுற்றுலாதுறைசார் ஒத்துழைப்புகள் சம்பந்தமாக இரு தரப்பு சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.