இந்தோனேசியா, ரஷ்யாவுடன் இணைந்து முதன்முறையாக கூட்டு கடற்படை பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
அத்துடன், ஆஸ்திரேலிய படையினருடனும் இந்தோனேசியா கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றது.
நடுநிலையான வெளிவிவகாரக்கொள்கையை பின்பற்றும் அணுகுமுறையின் ஓரங்கமாகவே இவ்வாறு ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தோனேசியா கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றது என்று பாதுகாப்பு துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த கூட்டு பயிற்சிக்காக ரஷ்ய போர்க்கப்பல்கள் இந்தோனேசியாவை நோக்கி வந்துள்ளன. இந்த கூட்டு பயிற்சியானது வேறு எந்தவொரு நாட்டையும் இலக்கு வைத்தது அல்ல என்று இந்தோனேசியாவுக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேசிய படையினர் ஞாயிற்றுக்கிழமை முதல் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலிய படைகளுடன் இந்தோனேசியா தனித்தனியாகவே பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றது என தெரியவருகின்றது.