உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரிய படைகளை ரஷ்யா களமிறக்கியுள்ள நிலையில், உக்ரைனுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஜி 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமது படைகளை வடகொரியா உடன் மீள பெறவேண்டும் எனவும் குறித்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் வடகொரியாவின் இந்த நகர்வானது பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன், ஐ.நா. விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறும் வகையில் அமைந்துள்ளது. எனவே, ரஷ்யாவுக்கான வடகொரியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் ஜி 7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய ஆகியவற்றின் வெளிவிவகார அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைனின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம் எனவும் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.