நியூ சவூத் வேல்ஸ் மத்திய கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த சிறுவன், மூன்று நாட்களுக்கு பிறகு இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது தந்தை மற்றும் சகோதரர்களுடன் சென்றிருந்தவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 வயதான குறித்த சிறுவன் கடலில் அடித்து செல்லப்பட்டிருந்தார்.
இதனையடுத்து தேடுதல் பணி ஆரம்பமானது. இந்நிலையிலேயே இன்று சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது கடலில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர் .