ஆஸ்திரேலியாவில் குடிவரவு தடுப்பு மையங்களில் 900 இற்கு அதிகமான புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பப்புவா நியூகினியாவில் 46 பேரும், நவுருவில் 94 பேரும் தடுப்பு காவலில் உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவில் 30 நாட்கள் வரையும், அமெரிக்காவில் 48 நாட்கள் வரையும் தடுத்து வைக்கப்படும் நிலையில், ஆஸ்திரேலியாவில் 565 நாட்களுக்கு மேல் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
“ புகலிடக்கோரிக்கையாளர்கள் எவ்வளவு காலம் தடுப்பில் இருப்பார்கள் என தெரியவில்லை, இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.” என்று புகலிடக் கோரிக்கையாளர்கள் வள மையத்தின் இயக்குநர் Jana Favero தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 90நாட்களுக்கு மேல் புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பது சட்டவிரோதமென கருதும் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.