சிட்னி விமான நிலையத்தில், விமானத்துக்குள் சக பயணியொருவர்மீது தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் நபர் பெடரல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தில் இருந்து சிட்னிவந்த விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பயணியொருவர், தனது பயண பையை எடுக்க முற்பட்டபோது அது பயணியொருவரின் தலை பகுதியில் விழுந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த 25 வயது நபரொருவர், குறித்த பயணியின் முகத்தில் தாக்கியுள்ளார்.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த பயணியொருவரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
அவர்மீது பொலிஸார் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.