ஜனரஞ்சக பெண் எழுத்தாளரான சியாமளா யோகேஸ்வரன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 23 ஆம் திகதி (23.11.2024) மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மாலை 5 மணிக்கு 142 - 144 DRUMMOND STREET OAKLEIGHஎனும் முகவரியில் அமைந்துள்ள OAKLEIGH மண்டபத்தில் வெளியீட்டு விழா ஆரம்பமாகும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைத் தொகுப்புகளை உள்ளடக்கிய விடியல் மற்றும் மெல்லிழைகள் போன்ற நூல்களே வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.