இன வெறுப்பை தூண்டும் வகையில் செயற்படுகின்றது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குழுவை குறிவைத்து மெல்பேர்ண் முழுவதும் விக்டோரிய பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் வேட்டையின்போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிர வலதுசாரி குழுவான நெஷனல் சோசலிஸ்ட் நெட்வேர்க் எனும் அமைப்பை இலக்கு வைத்தே தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாற்றும் ஏனைய சில இடங்களில் இந்த குழு நவநாஜிகள் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையையடுத்து ஆஸ்திரேலியாவில் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.