ரஸ்ய ஜனாதிபதி புடினை கடுமையாக விமர்சித்துவரும் ரஸ்ய – அமெரிக்க பத்திரிகையாளரான Masha Gessen இற்கு ஆஸ்திரேலியா வருவதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
விசா வழங்குவதில் ஆரம்பத்தில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தாலும் தற்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Masha Gessen நிகழ்வொன்றில் சிறப்புரையாற்றுவதற்காக கடந்தவாரம் ஆஸ்திரேலியா வருவதற்கு திட்டமிட்டிருந்தார்.எனினும், ரஸ்யாவிலிருந்து சில ஆவணங்களை உள்துறை திணைக்களம் கோரி இருந்தது. இதனால் விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது விசா கிடைக்கப்பெற்றுள்ளதை Masha Gessen உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், ஆஸ்திரேலியா வருவதற்குரிய திகதி விவரம் அறிவிக்கப்படவில்லை.