பொது இடத்தில் நாஜி வணக்கம் செலுத்திய ஆஸ்திரேலியாவில் தீவிர வலதுசாரி கொள்கையுடைய நபரொருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதமே 25 வயதான Jacob Hersant என்பவர் இவ்வாறு நாஜி வணக்கம் செலுத்தி இருந்தார்.
நாஜி வணக்கத்துக்கும், நாஜி சின்னங்களை காட்சிப்படுத்துவதற்கும் புதிய சட்டங்கள் விக்டோரியாவில் கடந்த வருடம் இயற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சட்டத்தின்கீழ் தண்டனை பெறும் முதல் விக்டோரியர் இவராவார்.
Jacob Hersant இன்று மெல்பேர்ண் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே அவருக்கு ஒரு மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என்று இன் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.