பிரிஸ்பேனுக்கு அருகே துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கார் விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் 16 வயது சிறுவன்மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Griffin பகுதியில் வைத்தே நேற்று காலை துப்பாக்கி முனையில் குறித்த காரை அவர் கடத்தி சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட காரை அவர் வேகமாக ஓட்டுச் செல்லும்போது பொலிஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காரிய பயணித்த 69 வயது பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
குறித்த சிறுவனுக்கும் மற்றும் இரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சிறுவன் பொலிஸ் பாதுகாப்பின்கிழ் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.