பிரபலமான சிட்னி கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் முன்கூட்டியே உயிரிழந்திருந்தார் எனக் கூறப்படுகின்றது.
63 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.