Adelaide புற நகர் பகுதியில் பகுதியில் நபரொருவர் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
விடுதியொன்றின் வளாகத்தில் வைத்தே குறித்த கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 23 வயது இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் தப்பியோடிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பிணை மறுக்கப்பட்டுள்ளது.