நியூ சவூத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் 70 வயது பெண்ணொருவரை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்று காலை 8 மணியளவில் கடற்பகுதியில் குறித்த பெண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
59 வயது ஆணொருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் ஆண்களால் 54 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.