கொரோனா பெருந்தொற்றால் ஆஸ்திரேலியாவில் கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்த திருமணம் செய்துகொள்வோர் எண்ணிக்கை, தற்போது அதிகரித்துள்ளது.
இதன்படி கடந்தவருடம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 439 பேர் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அத்துடன், 48 ஆயிரத்து 700 பேர் விவாகரத்து பெற்றுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றால் 2022 இல் திருமண எண்ணிக்கை 6.9 சதவீதத்தால் குறைந்திருந்தது. இந்நிலையிலேயே தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
அத்துடன், ஆஸ்திரேலியாவில் விவகாரத்து செய்வோர் எண்ணிக்கை 1.1 வீதத்தால் குறைவடைந்துள்ளது.