வெளிநாட்டு பிரஜைகள் என நம்பப்படும் நால்வர் Northern Territory
பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
குரோக்கர் தீவு பகுதியில் வைத்தே நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டார்வினுக்கு வடகிழக்கே 250 கிலோ மீற்றர் தொலைவிலேயே குரோக்கர் தீவு அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு நபரொருவருக்கு பணம் வழங்கியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நால்வரும் தீவிர வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு, சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.