நியூ சவூத் வேல்ஸில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நில நடுக்கத்தை 300 இற்கு மேற்பட்டோர் உணர்ந்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
சிட்னிக்கு வடமேற்கே 250 கிலோமீற்றர் தொலைவில், அப்பர் ஹன்டர் பகுதியிலேயே இன்று நண்பகல் 12.15 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதியும் இப்பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது.