பென்ரித் ஹோட்டல் அறைக்குள் இருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர்மீது, கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
53 வயதான குறித்த நபர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே நேற்று முன்தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே, குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.