மெல்பேர்ணில் பொலிஸ் வாகன்மீது சிறுநீர் கழித்த நபருக்கு 790 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் ரோந்து சென்ற கார்மீதே இவ்வாறு சிறுநீர் கழிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இச்செயலில் ஈடுபட்ட விக்டோரியாவை சேர்ந்த நபரை அடையாளம் கண்ட பொலிஸார், அநாகரீகமான நடத்தைக்காக அபராதம் விதிப்பதற்குரிய நோட்டீஸை வழங்கினர்.