இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் கூட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும், பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையிலான இரு தரப்பு சந்திப்பு கன்பராவில் நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை புதுப்பித்து வலுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்படவுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் பாதுகாப்பு பொறியியலாளர்களை 2025 இல் ஆஸ்திரேலியா பிலிப்பைன்சுக்கு அனுப்பவுள்ளது.
பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து பிலிப்பைன்ஸ் செயற்படும் என்று அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார்.