காவல்துறை நடவடிக்கைகளால் பூர்வக்குடி மக்களுக்கு ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் Northern Territory காவல்துறை ஆணையாளர் Michael Murphy , பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
பூர்வக்குடி மக்களின் Garma திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரினார்.
காவல்துறையால் பூர்வக்குடி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
“ இது மாற்றத்திற்கான நேரம், கடந்த காலம் பற்றி சிந்திக்காமல், முன்னோக்கி செல்வோம்.” – எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.