ஆஸ்திரேலியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட சில புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் கூட்டு இராணுவ பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெறும்.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் Prabowo Subianto, பிரதமர் Anthony Albanese உடன் கன்பராவில் இன்று பேச்சில் ஈடுபட்டார்.
இரு தரப்பு சந்திப்பின் பின்னர் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இதில் ஒன்றே பாதுகாப்பு உடன்படிக்கை என தெரியவருகின்றது.
“ வரலாற்று முக்கியத்துவமிக்க மேற்படி ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.” என்று பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.
பாதுகாப்பு ஒப்பந்தமானது பிராந்திய ஸ்தீரத்தன்மைக்கு வழிவகுக்கும் எனவும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவானது தென்கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்திவருகின்றது. குறித்த பகுதிகளில் சீனாவின் ஆதரிக்கம் அதிகரித்துள்ள நிலையிலேயே ஆஸ்திரேலியாவும் தீவிர நகர்வுகளில் இறங்கியுள்ளது.
அதேவேளை, பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் விரைவில் இந்தோனேசியா செல்லவுள்ளார்.