வீட்டு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருவதால் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் சிறைகளில் உள்ள பூர்வக்குடி முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாதம் 4,103 முதியவர்கள் இவ்வாறு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தரவுகள் வெளியாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீத அதிகரிப்பாகும்.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பூர்வக்குடி மக்களாவர் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
குடும்ப வன்முறை தொடர்பான குற்றச்சாட்டு சம்பந்தமாக ஆயிரம் பேர் சிறைகளில் உள்ளனர் எனவும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இது 29 சதவீத அதிகரிப்பாகும்.