2025 ஜனவரி 13 ஆம் திகதி முதல் 19 வரையான காலப்பகுதியை 'தமிழ்ப் பாரம்பரிய வாரமாக' பிரகடனப்படுத்துமாறுகோரி முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிரீன்ஸ் கட்சியைச் சேர்ந்த, கம்பர்லான்ட் கவுன்சிலர் சுஜன் செல்வன் நகரசபைக் கூட்டத்தில் மேற்படி பிரேரணையை முன்வைத்துள்ளார்.
இப்பிரேரணைiயை லேபர் கட்சி கவுன்சிலர் சுமன் சாஹா வழிமொழிந்தார். மேற்படி யோசனை பெரும்பாலான கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற்றது.
சிட்னிவாழ் தமிழ்ச் சமூகத்தின் சார்பில், கேதரன் பார்த்தீபன் சபையில் உரையாற்றி இந்த முன்மொழிவுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்.
தமிழ் மொழியின் செழிப்பையும், தமிழர் பாரம்பரியத்தையும் கொண்டாடும் இந்த முயற்சி மிக முக்கியமானது. நமது பாரம்பரியத்தை, வரலாற்றை மற்றும் ஆஸ்திரேலிய நாட்டிற்கான பங்களிப்புகளை இந்த வாரத்தில் கௌரவிக்க ஒன்றிணைவோம்.
சிட்னியில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய மிக முக்கியமான வாய்ப்பு. இதற்காக பின்னணியில் நின்று, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, களப்பணியாற்றிய நம்மவர்களுக்கு நன்றி எனவும் அவர் தமதுரையில் குறிப்பிட்டுள்ளார்.